Thank you! Your submission has been received!
Oops! Something went wrong while submitting the form.
Zone 7

பகுதி 7: குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனை தகவல் டிபார்ட்மெண்ட் & சுகாதாரப் பராமரிப்பு டிபார்ட்மெண்ட்

இங்கிருந்து குடியிருப்பு கோபுரங்களைப் பார்க்கலாம். அதில், பெத்தேல் குடும்பம் இரண்டு கட்டிடங்களில் மட்டும் வசிக்கிறார்கள். கிளை அலுவலகத்தை ஜகார்த்தாவிற்கு மாற்றும் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே, தலைமையகம் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்நிடம் நெட்வர்க் கேபிள்களை இழுத்து, குடியிருப்புகளில் ஒரு பிரத்யேக கிளை வலையமைப்பை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. இது ஒரு சிறிய வேலையல்ல—இதற்கு அதிக நேரம், முயற்சி மற்றும் வளங்கள் தேவைப்பட்டன. ஆனால் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட்டில் உள்ள சகோதரர்கள் இந்தப் பணியின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டனர். நீண்ட காலத்திற்கு, இது பெரிய அளவில் பணத்தை மிச்சப்படுத்தியது. மிக முக்கியமாக, எங்களுடைய சொந்த பாதுகாப்பான பெத்தேல் நெட்வொர்க்கைக் கொண்டிருப்பது பாதுகாப்பான மற்றும் நம்பகமான இன்டர்நெட் கனெக்‍ஷனை உறுதி செய்கிறது. கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பெத்தேல் குடும்பத்தினர் தங்கள் சொந்த அறைகளிலிருந்து வேலை செய்ய வேண்டியிருந்தபோது இது மிகவும் முக்கியமா இருந்தது. ஒரே நேரத்தில் பலர் ஆன்லைனில் இருப்பதால், வலுவான மற்றும் நிலையான இன்டர்நெட் கனெக்‍ஷன் மிகவும் அவசியமானது.

இந்தப் பகுதியை விட்டு வெளியேறும்போது, ​​நீங்கள் சுகாதாரப் பராமரிப்புத் டிபார்ட்மெண்டையும்  மருத்துவமனை தகவல் டிபார்ட்மெண்டையும் காண்பீர்கள். எங்கள் கிளை அலுவலகத்தில் சேவை செய்யும் 950க்கும் மேற்பட்ட விசேஷ முழுநேர ஊழியர்களைப் கவனிக்க சுகாதாரப் பராமரிப்பு டிபார்ட்மெண்ட்டில் உள்ள சகோதர சகோதரிகள் கடுமையாக உழைக்கிறார்கள். ஒவ்வொரு மாதமும், இந்தோனேசியா முழுவதிலுமிருந்து 450 சுகாதாரப் பராமரிப்பு தேவைகளை இத்த டிபார்ட்மெண்ட் பெறுகிறது. சிறிய பட்டணத்திலும் ஒதுக்குப்புறமான பகுதிகளிலும் உள்ள சுகாதாரப் பராமரிப்பு முறை பெரும்பாலும் பற்றாக்குறையாக இருப்பதால், நோயாளிகள் பெரிய பட்டணங்களுக்கு சென்று சரியான மருத்துவ கவனிப்பைப் பெற இந்தத் டிபார்ட்மெண்ட் அடிக்கடி ஏற்பாடு செய்கிறது.

மருத்துவமனை தகவல் டிபார்ட்மெண்ட் நாடு முழுவதும் 23 மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்களுடன் இணைந்து செயல்படுகிறது. 200-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சுமார் 500 ஒத்துழைக்கிற மருத்துவர்கள் எங்களிடம் உள்ளனர், மேலும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து வளர்ந்து வருகிறது.

Zone 6

பகுதி 6: கிளை அலுவலக குழுவினர்

கான்பரன்ஸ் அறையில் புகைப்படம் எடுக்காததற்கு மிக்க நன்றி. கிளை அலுவலகம் இந்த அறையை ஒவ்வொரு புதன்கிழமையும் வாராந்திர கூட்டங்களுக்குப் பயன்படுத்துகிறது. இது நவீன தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டிருக்கிறது.  Zoom அல்லது Microsoft Teams வழியாக நேரில் கலந்துரையாடல்களை ஆதரிக்கிறது. கிளை அலுவலகக் குழுவினர் இந்தோனேசியா முழுவதும் தொலைதூர தீவுகளுக்குப் பயணம் செய்யும்போது இது மிகவும் உதவியாக இருக்கும் - அவர்கள் தொலைதூரத்தில் இருந்து கூட்டங்களில் சேர்ந்து பங்களிக்க முடியும். திரையில், எங்கள் ஒன்பது கிளை அலுவலகக் குழுவின் உறுப்பினர்களின் படங்களை நீங்கள் காணலாம்.

இந்த ஜன்னல்களுக்கு வெளியே பார்த்தால், எங்கள் புதிய கிளைக் கட்டிடத்தின் கூரையைப் பார்க்கலாம். இன்று நாம் முதன்முதலில் சந்தித்த இடம் அதுதான், நம்முடைய சுற்றுப்பயணத்தின் தொடக்கப் புள்ளி. அதன் இடம் மூலையில் இருப்பதால்  நீங்கள் சுலபமாக அடையாளம் காணலாம்.

Zone 5

பகுதி 5: கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் & மொழிபெயர்ப்பு டிபார்ட்மெண்ட்

கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் தொடர்பான அனைத்தையும் கம்ப்யூட்டர் டிபார்ட்மெண்ட் பொறுப்பேற்கிறது. இந்த டிபார்ட்மெண்ட் கிளை அலுவலகத்திலும், கிளை தொலைதூர தொடர்பான வேலைகளுக்காகவும் 800 மேற்பட்ட கம்ப்யூட்டர் பராமரிப்பை கவனித்துக்கொள்கிறது. நிறைய வாலண்டியர்கள் அமைப்பிடமிருந்து பயிற்ச்சி பெற்று பெத்தேல் உறுப்பினர்களும் தொலை தூரத்திலிருந்து வேலை செய்பவர்களும் நியமிப்பை முடிக்க பயனுள்ள உதவியையும் ஆதரவையும் கொடுக்கிறார்கள். கம்ப்யூட்டர் டிபார்ட்மென்ட் பற்றிய விவரங்கள் அவ்வளவு தான்.  அடுத்து, நாம் மொழிபெயர்ப்பு டிபார்ட்மென்டுக்கு செல்வோம். இந்த டிபார்ட்மென்ட் பற்றிய சில விவரங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு வழிகாட்டி அங்கே அறையில் காத்திருக்கிறார்.

உங்களை  மொழிபெயர்ப்பு டிபார்ட்மென்டுக்கு வரவேற்கிறோம். இப்போது, ​​மொழிபெயர்ப்புத் டிபார்ட்மெண்டில் இருக்கிற  வரைப்படத்தை பார்போம். இந்த வரைப் படத்தில், இந்தோனேசியாவில் 280 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பேசும் 700 மொழிகளின் சில உதாரணங்களை நீங்கள் காணலாம். இருப்பினும், பெரும்பாலான மக்கள் இந்தோனேசியாவின் தேசிய மொழியான இந்தோனேசிய மொழியைப் பேசுகிறார்கள். தயவுசெய்து வரைப்படத்தை படம் எடுத்துகொள்ளுங்கள். பிறகு, சுவாரஸ்யமான தகவல்களையும் பின்னர் பார்க்க உங்களுக்கு அதிக நேரம் கிடைக்கும்.

இந்த அனைத்து மொழிகளில், சைகை மொழி பிராந்த்தியத்தில் அற்புதமான வளர்ச்சியைக் காண்கிறோம். சைகை மொழியில் தற்போது இரண்டு வட்டாரங்கள் உள்ளன, 16 சபைகள் மற்றும் 19 தொகுதிகள் உள்ளன. இந்த வளர்ச்சியை ஆதரிக்க, கூட்டங்களுக்கு மற்றும் வெளி ஊழியத்திற்கு கிட்டத்தட்ட அனைத்து சைகை மொழி வெளியீடுகளையும் நாங்கள் மொழிபெயர்க்கிறோம். மேலும் சிறப்பான விஷயம் என்னவென்றால், புதிய உலக மொழிபெயர்ப்பை சைகை மொழியில் மொழிபெயர்க்க ஆளும் குழு ஒப்புதல் அளித்துள்ளது, இது படிப்படியாக வெளியிடப்படும்! இதுவரை, நாங்கள் ஏற்கனவே 29 புத்தகங்களை வெளியிட்டுள்ளோம்.

இப்போது நாம் ஒரு ஊக்கமளிக்கும் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இது சுவோனோ. அவர் மது மற்றும் புகையிலையை விரும்பும் ஒரு பனிச் சறுக்கு காலணியி பிரியர். சில வருடங்களுக்கு முன்பு, இதே நேரத்தில், கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைச் சொல்ல அவர் எங்கள் ராஜ்ய மன்றத்திற்கு வந்தார். ஏன்? ஏனென்றால், காது கேளாதோர் பலர் பொதுவாக “JW வீட்டில்” — அதாவது நம் ராஜ்ய மன்றத்தில் — கூடி வருவதை அவர் கேள்விப்பட்டார். ஆனால், கூட்டத்திற்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகள் வித்தியாசமானவர்கள் என்பதை அவர் உணர்ந்தார், பைபிள் படிப்பு அழைப்பை ஏற்றுக்கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு முஸ்லிம் மத ஆசிரியரிடமிருந்து பெற்ற இரண்டு படங்களை நம் சகோதரர்களுக்குக் காட்டினார்.  

ஒரு படத்தில் ஒரு நபர் தவறாமல் தொழுவுவதால் சொர்க்கத்திற்குச் செல்கிறார். இன்னோறு படத்தில் ஒருவர் தொழாமல் நரகத்திற்குச் செல்கிறார். நம் சகோதரர் உடனடியாக இந்தோனேசிய சைகை மொழியில் ஒரு வீடியோவை அவருக்குக் காட்டினார், அதில் நம் அன்பான கடவுள் மனிதர்களை நித்தியமாக நரகத்தில் சித்திரவதை செய்வது சாத்தியமில்லை என்பதை விளக்கினார். அதைப் பார்த்த பிறகு, சுவோனோ அந்த இரு படங்களை கிழித்து, “பைபிள் சொல்வது சரிதான், யெகோவாவின் சாட்சிகள் சொல்வது சரிதான்” என்றார். ஏராளமான எதிர்ப்புகள் மற்றும் சவால்கள் இருந்தபோதிலும், அவர் இறுதியாக ஞானஸ்நானம் பெற்றார்.

எல்லா வகையான மக்களுக்கும் ஏற்ற நேரத்தில் ஆன்மீக உணவை வழங்க உண்மையுள்ள அடிமைக்கு உதவ முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இன்னும் பலர் யெகோவாவை அறிந்துகொண்டு இறுதிவரை உண்மையாக இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

Zone 4

பகுதி 4: சட்டக் குழு டிபார்ட்மென்ட் & செய்தி மற்றும் மக்கள் தொடர்பு டிபார்ட்மெண்ட்

பல இன மக்கள் வசிக்கும் ஒரு பரந்த தீவுக்கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுடன் பணிபுரிய சட்டக் குழு டிபார்ட்மென்ட் சகோதர சகோதரிகளிடமிருந்து வளைந்து கொடுக்கும் தன்மையும் பொறுமையும் தேவை. பல தீவுகள் மத்திய அரசாங்கத்தால் அனுமதித்ததால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சுயாட்சியைக் கொண்டுள்ளன, அதாவது ஒவ்வொரு மாகாணத்திலும் விதிமுறைகள் மிகவும் மாறுபடும். இந்நாட்டில் 38 மாகாணங்களில் ஏறக்குறைய 280 மில்லியன் மக்கள் உள்ளனர்.

சட்ட வழக்குகள் மற்றும் அரசு தொடர்புகளில் சவால்கள் இருந்தாலும், பல அதிகாரிகள் எங்கள் மரியாதையான அணுகுமுறையைப் பாராட்டினர். அவர்கள் காட்டும் நன்றியுணர்வின் மூலம் யெகோவாவின் பெயர் புகழப்படும் பல சந்தர்ப்பங்களை நாம் கண்டிருக்கிறோம்.

உதாரணமாக, ஒரு மாகாணத்தில் மத விவகார அலுவலகம் எங்கள் விண்ணப்பங்கள் முழுமையாகவும் ஒழுங்காகவும் இருப்பதைப் பாராட்டியது, மறு ஆய்வு செய்யவதற்கு அவர்களுக்கு சுலபமாக இருந்தது. மற்றொரு உதாரணம், பொது குடியேற்ற அலுவலகம் காகித அடிப்படையிலான முறையிலிருந்து ஆன்லைன் முறைக்கு மாறியது. புதிய முறையைக் கற்றுக்கொள்வதற்கும் அதற்கு ஏற்ப மாற்றுவதற்கும் நாங்கள் நேரம் எடுத்துக்கொண்டோம். உண்மையை சொல்லப்போனால், ஒரு குடியேற்ற அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி ஒருமுறை அவர்களின் அமைப்பில் ஒரு அம்சத்தைப் பயன்படுத்துவதை குறித்து எங்களிடம் ஆலோசனை கேட்டார் - ஏனெனில் அவர்கள் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டிருக்கும்போதே நாங்கள் அதை ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தியிருந்தோம்.

நீக்கள் இந்தப் பகுதியை விட்டு வெளியேறும்போது, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு டிபார்ட்மென்ட்டை பார்ப்பீர்கள். சட்டக் குழு டிபார்ட்மென்ட்டுடன் இது நெருக்கமாக வேலை செய்கிறது. இந்தத் டிபார்ட்மென்ட், தகவல் தொடர்பைப் பராமரிக்கவும், யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய துல்லியமான தகவல்களை அரசு அதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் தேவைப்படும்போது கல்வித்துறைக்குத் தெரிவிக்கவும் சட்டத் துறையுடன் நெருக்கமாகச் செயல்படுகிறது.

Zone 3

பகுதி 3: வரலாறு பலகைகள்

இங்கிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போகோர் பட்டணத்தில் உள்ள பைபிள் கல்வி மையத்தில் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி நடத்தப்படுவதாக சேவைத் துறையில் நாங்கள் குறிப்பிட்டோம். இந்த வசதி 1976 முதல் 2001 வரை இந்தோநேசியாவில் தடை இருந்த காலத்தில் கட்டப்பட்டது.  

இது இரண்டு பத்தாண்டுக் காலத்துக்கு மேலாக கிளை அலுவலகமாக செயல்பட்டது.

தடை காரணமாக, கவனத்தை ஈர்க்காமல் இருக்க, தொலைதூர, ஒதுக்குப்புறமான இடத்தில் கட்டப்பட்டன. கட்டுமானப் பணிகள் முடிந்ததும், இந்த வளாகம் அதிகாரப்பூர்வமாக ஒரு கல்வி மையம் என்று அழைக்கப்பட்டது. இந்த சியாவி கிளை அலுவலகம்  பார்ப்பதற்கு வழக்கமான பெத்தேல் வளாகத்தை போல இருக்கிறது, ஒரு சிறிய வளாகத்தில் சில கட்டிடங்கள் நெருக்கமாக தொகுக்கப்பட்டுள்ளன. இப்போது எங்கள் தற்போதைய பெத்தேல் வசதிகளின் அமைப்பு மிகவும் வேறுபட்டவை! அது மட்டுமல்ல - முழு சூழ்நிலையும் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பெத்தேல் வேலை விவேகத்துடன் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. அந்த வசதி உண்மையில் என்னவென்று அக்கம்பக்கத்தினருக்குத் தெரியாது, மேலும் பெத்தேல் ஊழியர்கள் சுற்றியுள்ள பகுதிகளில் பிரசங்கிப்பதைத் தவிர்த்தனர், இதனால் அங்கு எங்கள் நடவடிக்கைகள் கவனத்தை ஈர்க்காதபடி பார்த்து கொள்ள முடிந்தது.

Zone 2

பகுதி 2: சர்வீஸ் டிபார்ட்மென்ட்

சர்வீஸ் டிபார்ட்மென்ட்க்கு வரவேற்கிறோம்! இந்த சர்வீஸ் டிபார்ட்மென்ட் இந்த மாடியில் பெரிய இடத்தைப் பயன்படுத்துகிறது, ஏனெனில் ஊழிய வேளை அதிகரிக்கும் போது , இந்த டிபார்ட்மென்ட்டும் பிஸியாக இருக்கும்.

தற்போது எங்கள் நாட்டில் சுமார் 33,000 சுறுசுறுப்பான  பிரஸ்தாபிகள் உள்ளனர், மேலும் ஒவ்வொரு மாதமும் சுமார் 7,500 சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பலவிதமான முழுநேர சேவையில் ஈடுபடுகின்றனர். பயணியர்களாகவும், விசேஷ  பயனியர்களாகவும், மிஷனரிகள் மற்றும் வட்டாரக் கண்காணிகளாகவும்  ஈடுபட்டுள்ளனர். நாட்டின் அனைத்து பிரஸ்தாபிகளிலும் இது 23 சதவிகிதம் ஆகும்.

எங்கள் பிராந்தியம் மேற்கிலிருந்து கிழக்கு வரை 5,000 கிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 17,000 தீவுகளைக் கொண்ட ஒரு பரந்த தீவுக்கூட்டமாகும். பல பிரஸ்தாபிகள் பெரிய பட்டணத்தில் வசிக்கின்றனர், ஆனால் எங்கள் பிராந்தியம் பல சிறிய மற்றும் ஒதுக்குப்புறமான சபைகளும் குழுக்களும் உள்ளன. இவற்றில் சில கடலின் நடுவில், மலைப்பிரதேசங்களில் அல்லது காடுகள் நிறைந்த பகுதிகளில் போன்ற தொலைதூர இடங்களில் அமைந்துள்ளன. இத்தகைய தனித்துவமான சவால்கள் இருந்தபோதிலும், யெகோவா எங்கள் பிராந்தியம் முழுவதும் பிரசங்க வேலையை ஆசீர்வதித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில், 10,000 பேர் முழுக்காட்டுதல் பெற்றனர், அவர்களில் பலர் ஒதுக்குப்புறமான பகுதிகளில் உள்ளனர்.  

ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி, அல்லது SKE, எங்கள் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. ஆண்டுதோறும், ஜகார்த்தாவிற்கு வெளியே, போகோர் பட்டணத்தில், உள்ள எங்கள் பைபிள் பள்ளி வளாகத்தில் 4-5 வகுப்புகளை நடத்துகிறோம். பயிற்சி பெற்றவர்கள் தற்காலிக விசேஷ பயனியர்களாக நியமிக்கப்பட்டு தொலைதூர இடங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

2023 ஆம் ஆண்டு உலகலாவிய விசேஷ ஊழியம் நடத்தப்பட்டது. 5,000 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் பங்கேற்றனர், 130 க்கும் மேற்பட்ட பிராந்தியங்களில் பிரசங்கித்தார்கள். அதன் பலன்கள் உண்மையிலேயே ஊக்கமளிப்பதாக இருந்தன - 2,000 க்கும் மேற்பட்ட பைபிள் படிப்புகள் தொடங்கப்பட்டன. ஒரு இடத்தில் மட்டும், அந்தக் குழு ஒரே வாரத்தில் 125 க்கும் மேற்பட்ட பைபிள் படிப்புகளைத் தொடங்கியது. இந்தோனேசியர்கள் மிகவும் நட்பானவர்கள் என்று பெயர் போனவர்கள், எனவே உரையாடல்களைத் தொடங்குவது பொதுவாக மிகவும் எளிதானது. இந்த அன்பான மற்றும் திறந்த மனப்பான்மை விசேஷ ஊழியத்தின் வெற்றிக்கு பங்கு வகித்தது.

Zone 1

பகுதி 1: பெத்தேல் கிளை அலுவலகம் & உள்ளூர் வடிவமைப்பு/கட்டுமான  டிபார்ட்மெண்ட்

நண்பர்களே, உங்களை வரவேற்கிறோம்! இந்த வேலை இடம் பொதுவாக பெத்தேல் அலுவலகத்தால் பயன்படுத்தப்படுகிறது. இங்கே, பெத்தேல் அலுவலகம் மேற்பார்வை செய்யும் அனைத்து கிளை வசதிகளையும் காணலாம். [Point to the banner that shows different buildings.] சமீப ஆண்டுகளில், கிளை புதுப்பிப்பு திட்டத்தில் வேறு நாடுகளிலிருந்து வந்த வாலண்டியர்கள்களின் உதவியைப் ஆசீர்வாதமாக பெற்றோம். புதுப்பிப்பு காலத்தில், பெத்தேல் குடும்பத்துடன் சேர்த்து சுமார் 60% கூடுதல் கட்டுமான வாலண்டியர்கள் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்ததால், இந்த  டிபார்ட்மெண்ட் பிஸியாக இருந்தது, குறிப்பாக  
கட்டுமானத் வாலண்டியர்கள்களை கண்காணிப்பதிலும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், அதே நேரத்தில், பெத்தேலில் வழக்கமான மற்ற ஏற்பாடுகள் அனைத்தும் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதிலும் மும்முரமாக இருந்தது.

இந்த சுற்றுப்பயணத்தின் முதல் டிபார்ட்மெண்ட், உள்ளூர் வடிவமைப்பு மற்றும் கட்டுமான டிபார்ட்மெண்ட் பற்றிய தகவலைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.  கட்டுமான  அலுவலகம் வேறு கட்டிடத்தில் உள்ளது, இன்று சுற்றுப்பயணத்திற்கு திறக்கப்படவில்லை. இந்த படத்தில், எங்கள்  வட்டாரத்தில் கட்டப்பட்ட பல்வேறு ராஜ்ய மண்டபங்களின் மாதிரிகளைப் பார்க்கலாம், எளிமைப்படுத்தப்பட்ட மண்டபம் உட்பட,  சட்ட அனுமதி பெற தேவையான பல படிகள் தேவைப்பட்டது. மேலும், மண்டபத்தின் கட்டுமானத்தில் பல்வேறு கட்டங்கள் 3D மாதிரிகளில் பார்கலாம். தயவுசெய்து புகைப்படம் எடுக்க தயங்காதீர்கள், இதன் மூலம் உங்கள் ஓய்வு நேரத்தில் விவரங்களை பின்னர் அனுபவிக்க முடியும். இப்போது, நியாஸ் என்ற சிறிய தீவில் உள்ள ராஜ்ய மண்டப கட்டுமான குழுவின் அனுபவத்தைப் பகிர விரும்புகிறேன்.

ஒரு ஆண் ராஜ்ய மன்றக் கட்டுமானப் வேலை நடைப்பெறும் இடத்தை அடிக்கடி கடந்து சென்றார், பச்சை மற்றும் ஆரஞ்சு நிற ஜாக்கெட்டுகள் அணிந்த தொழிலாளர்களைக் கவனித்தார். இந்தோனேசியாவில், உலக கட்டுமான குழுக்கள் பாதுகாப்பு விதிகளைப் வழக்கமாக புறக்கணிக்கின்றன. அவர்கள் விரும்புகிரபடி உடைகள் மற்றும் காலணிகளை அணிவார்கள், பெரும்பாலும் செருப்புகளை மட்டுமே அணிவார்கள் அல்லது சட்டை இல்லாமல் வேலை செய்வார்கள். ஆதனால் நம் சகோதரர்கள் சரியான பாதுகாப்பு உபகாரணங்களை அணிந்ததால், மக்கள் கவனித்தனர். இந்த சூழ்நிலமையில் இதுதான் நடந்தது. ஒரு நாள் அந்த ஆண் கேட்டார்: “இவர்கள் எந்த நிறுவனத்திலிருந்து வந்தவர்கள்? அவங்க ரொம்ப ஒழுங்காகவும், பாதுகாப்பு விஷயத்துல ரொம்ப சீரியஸாகவும் இருக்காங்க!” நம் சகோதரர் விளக்கினார்: “இவர்கள் எந்த வணிக நிறுவனத்திலிருந்தும் வரவில்லை — இவர்கள் யெகோவாவின் சாட்சிகள், இந்தோநேசியா முழுவதிலுமிருந்தும் வந்த வாலண்டியர்கள்.” அந்த ஆண் திகைத்துப் போய் சொன்னார்: “எங்கள் தேவாலயத்தில் இப்படிப் நாம இவ்வளவு நல்லா சேர்ந்து வேலை செஞ்சதில்லை. எப்போதும் ஒன்றன் பின் ஒன்றாக பிரச்சனைகள் இருக்கும்.” அவர் மிகவும் கவரப்பட்டதால், இன்றும் சந்திப்புகளை மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். நமது பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற சிறிய விஷயங்கள் கூட சாட்சி கொடுக்க ஒரு சிறந்த வழியாக இருக்கும் என்பதை இது காட்டுகிறது. யெகோவாவுக்குப் பாதுகாப்பு ஒருபோதும் சிறிய விஷயமல்ல.

Lobby (Main Office)

இடம்: APL கோபுரம், 31வது மாடி லாபி

எங்கள் “வானில் உள்ள கிளை அலுவலகத்திற்கு” 31-வது மாடிக்கு உங்களை வரவேற்கிறோம். இது மத்திய ஜாவாவின் ஜெபாரா நகரத்தில் முழுவதும் கையால் செதுக்கப்பட்ட மரக் கலைப்பொருள். நீங்கள் அனைவரும் இந்த காட்சியை அறிந்திருப்பீர்கள்—"இது கடவுள் சொல்வதைக்  கேளுங்கள்” என்ற பிரசுரத்தின் 2 மற்றும் 3-ஆம் பக்கங்களில் காணப்படும் பூஞ்சோலை படம். நீங்கள் பார்ப்பது போல், இது  எளிதில் உடையைக்கூடிய கலைப்பொருள், எனவே தயவுசெய்து இதைத் தொட வேண்டாம். இது இரண்டு தேக்குக் கட்டைகளிலிருந்து செய்யப்பட்டதாகும், சுமார் 250 கிலோ எடையுள்ளது. இதை செதுக்கியவருக்கு ஏழு மாதங்கள் பிடித்தது. முதலில் இதை 31-வது மாடிக்கு கொண்டு வந்தப்போது, எட்டு பேர் இந்த கலைப்பொருளை தூக்கி சுவரில் பொருத்தினர்.